2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஜெலி உற்பத்தி நிறுவனம் சிக்கியது

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்   

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் கொழும்புத்துறை பகுதியில் செவ்வாய்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, காலாவதியான ஜெலி, மென்பானங்களை கைப்பற்றியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன், புதன்கிழமை(16) தெரிவித்தார்.   

அதே போல், திருநெல்வேலி பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் இருந்தும் காலாவதியான ஜெலி மற்றும் மென்பானம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.   

“குறித்த ஜெலி, மென்பாகங்கள் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளன. எனினும், குறித்த நிறுவனம், காலாவதித் திகதியை 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் என மாற்றம் செய்து, புதிய லேபிள் ஒட்டி மீண்டும் விற்பனைக்கு விநியோகித்துள்ளது.   

அத்துடன், குறித்த நிறுவனம், ஏனைய வியாபார நிறுவனங்களுக்கு விநியோகித்த இந்தப் பொருட்களுக்கு பற்றுசீட்டினை வழங்கியிருக்கவில்லை” என இணைப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.   

“அதனையடுத்து, யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் இருந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரித்து விநியோகிக்கப்படும் ஜெலி, மென்பானங்களை அப்புறப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

இதேவேளை, சிறுவர்களுக்கான உணவு வகைகள் மற்றும் ஜெலி, மென் பானங்கள் ஏனைய இனிப்புக்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X