Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 28 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும் இல்லாமல் அரசாங்கம் இருப்பதால், மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, அது சம்மந்தமாக உறுதியான கருத்தை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்” என, கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை திங்கட்கிழமை (27) அனுப்பி வைத்துள்ளார்.
இக்கடிதம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “வட மாகாணத்தின் பல இடங்களிலும் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியில் இடம் பெற்று வரும் போராட்டங்களுக்கு நான் சென்றிருக்கின்றேன்.
அங்கு நீண்ட நாட்களாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த வருகின்ற போதும் இங்கு எதுவுமே நடக்காதது போன்றும் அது தொடர்பில் கரிசனை ஏதுமற்ற நிலையிலையே ஐனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினர் இருந்து வருவதால் மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
ஆகவே, இந்த விடயத்தில் ஐனாதிபதி உறுதியான கருத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனை ஐனாதிபதியோ அல்லது வேறு யாராகவோ அது அமைச்சர்களாகவோ இருந்தாலும் யாரின் ஊடாகவேனும் அத்தகைய கருத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இதனை வெளிப்படுத்துமாறு கோரியே ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றேன்.
இதேவேளை, நான் கொழும்பிற்கு செல்ல வேண்டியிருப்பதால் அங்கு ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடவும் எண்ணியுள்ளேன். அதன் போதும் வட மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்கள் மற்றும் மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறவுள்ளேன்” என, முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago