2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஜன்னல் கம்பியை வளைத்து நகைகள், பணம் திருட்டு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வீட்டு சமையல் அறையின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து உள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகள் மற்றும் 15ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டுச் சம்பவம், 3ஆம் கட்டை கே.கே.எஸ்.வீதி கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று சனிக்கிழமை (16) இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை 3.30க்கும் இடையில் இத்திருட்டு இடம்பெற்றிருக்காலம் என வீட்டு உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வீட்டிலுள்ள அனைவரும் சித்திரைக்குச் சென்ற நேரம் பார்த்து உள் நுழைந்த திருடர்கள், அலுமாரியின் சாவியை, மெத்தைக்குக் கீழ் இருந்து எடுத்து அதிலிருந்து 04 பவுண் தாலி உட்பட 18½ பவுண் நகைகளை வைக்கப்பட்டிருந்த கைப்பையினை எடுத்துச் சென்றுள்ளனர்.

குற்றத்தடுப்பு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X