Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வே.தபேந்திரன்
சமூகச் சேவைகள் அமைச்சால் வறிய நிலையிலுள்ள 70 வயதைத்தாண்டிய முதியோர்களுக்கான 2,000 ரூபாய் கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு ஆகியவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பயனாளிகளுக்கு ஒழுங்காக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2014 நவம்பர் மாதம் இக்கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக, வரவு-செலவுத்திட்ட மதிப்பு திறைசேரியின் செயலாளருக்கு அனுப்பப்படவில்லை.
இதனால், முதியோருக்கான 1,000 ரூபாய் கொடுப்பனவு, 2,000 ரூபாய் ஆக்கப்பட்ட போதும் உரிய நிதி ஏற்பாடுகள் வரவு-செலவுத் திட்டத்தினூடாகச் செய்யப்படாததால், திறைசேரியினால் நிதியை மாதாந்தம் ஒழுங்காக வழங்க முடியவில்லை.
அதேபோல பிரதேச செயலக மட்ட ரீதியாக மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு வழங்கப்பட்டு வந்த 3,000 ரூபாய் கொடுப்பனவு பின்னர் 100 பேருக்கு மேற்பட்டதாக அதிகரிக்கப்பட்டது.
இதுவும் உரிய நிதி அனுமதி நடைமுறைகள் பின்பற்றப்படாதமையால், மாதாந்தம் நிதி ஒதுக்கீடு ஒழுங்காக மேற்கொள்ளப்பட முடியாமல் இருந்தது.
இக்கொடுப்பனவுகள் மாதம் தோறும் திகதி ஒழுங்கின்றி வழங்கப்பட்டது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த வருடம் முதல் இக் கொடுப்பனவை மாதாந்தம் ஒழுங்காக வழங்க முடியுமென அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் ஊடாக இந்த நிதியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அரசின் கொள்கை மாற்றங்கள் ஏற்படும் போது தான் இது சாத்தியப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago