Freelancer / 2024 ஓகஸ்ட் 02 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்று (02) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ். மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன்..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை மையப்படுத்திய முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளடக்கும் போது எமது மக்கள் அவருக்கான ஆதரவை வழங்குவார்கள்.
அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, முன்னாள் போராளிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், வடக்கின் துரித பொருளாதார மேம்பாடு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் எங்கள் மக்களின் நீண்டகால கனவுகளாக உள்ளன.
அவற்றை நிறைவேற்றவல்ல தலைமைத்துவத்தையே எங்கள் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த தலைவர் என்ற மதிப்பை மக்கள் உங்களிடத்தில் கொண்டுள்ளார்கள்.
ஆகவே எங்கள் மக்கள் தொடர்பிலும் சிந்திக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன், என்றார். R






59 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago