2025 மே 15, வியாழக்கிழமை

‘ஜனாதிபதியின் கட்டுப்பாட்டை மீறி மணல் அகழ்வு முன்னெடுப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

எங்கெல்லாம் மணல் அள்ளக்கூடாது என்று இருந்தனவோ, அந்த இடங்களில் எல்லாம் தற்போது மணல் அகழ்வு, மிகச் சுதந்திரமாக இடம்பெற்று வருவதாக, வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர், கிரவல், மணல் கொண்டு செல்வதற்கு, ஜனாதிபதியால் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட விடயம் வரவேற்கப்பட வேண்டியதென்றும், அக்கட்டுப்பாட்டையடுத்து, மணல் அகழ்வு நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். 

தற்பொழுது, எங்கெல்லாம் மணல் அள்ளக்கூடாது என்று இருந்தனவோ, அந்த இடங்களில் எல்லாம் மணல் அகழ்வு மிகவும் சுதந்திரமாக இடம்பெற்று வருவதாகவும், அவர் தெரிவித்தார். 

எனவே, மணல் அகழ்வு தடுப்பு குறித்து, ஜனாதிபதி கடுமையான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமெனவும், சிவஞானம் கோரினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .