2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘ஜனாதிபதியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பாக உண்மைகள் தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், “இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் எனவும் அதனை விடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவரால் எழுப்பட்ட வினா ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்ட கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X