2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டைனமெட் பாவித்து மீன்பிடித்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 29 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புங்குடுதீவு கடற்பரப்பில்; டைனமெட் பாவித்து மீன்பிடித்த மீனவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால், இன்று  வெள்ளிக்கிழமை  தீர்ப்பளித்தார்.

கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி டைனமெட் பாவித்து மீன்பிடித்த குருநகர் பகுதியைச் சேர்ந்த மீனவரை கடற்படையினர் கைதுசெய்திருந்தனர். அத்துடன், அவரிடம் இருந்து 150 கிலோகிராம் மீனினையும் பறிமுதல் செய்திருந்தனர். தொடர்ந்து அவர் யாழ்.கடற்றொழில் நீரியல் வளதுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாறா நிறுவனத்திடம் இருந்து கிடைக்கபெற்ற அறிக்கையில் குறித்த மீன்கள் தடைசெய்யப்பட்ட வெடிமருந்தினை பாவித்து பிடித்தமை உறுதியானது.

இதனையடுத்து மீனவரை கடுமையாக எச்சரித்த நீதவான் அபராதம் விதித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X