2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

டைனமற் பயன்படுத்திய மீனவர்கள் விளக்கமறியலில்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவு செம்மலைக் கடற்பரப்பில் டைனமற் பயன்படுத்தி மீன் பிடித்த 08 மீனவர்களையும் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.எஸ்.ஸம்சுதீன், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறும் வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு செம்மலைக் கடற்பரப்பில் வெடிபொருட்களைப் பாவித்து மீன்பிடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து இத்தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது டைனமற் பாவித்து மீன்பிடித்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 08 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய வள்ளம், வலை, என்ஜின் மற்றும் மீன்களையும்; கைப்பற்றிய அதிகாரிகள் 08 மீனவர்களையும் கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X