Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில், டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சாவகச்சேரி பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “கொரோனா சமூகத்தொற்று தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. எனினும். தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால், டெங்கு தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.
“தற்போதைய சூழ்நிலையில், டெங்குத் தொற்று அதிகரிக்குமாயின், யாழ். மாவட்டத்தில் அபாயநிலை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன” எனவும் அவர் எச்சரித்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்குத் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றது. எனவே, சாவகச்சேரி பொது வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாவகச்சேரி பிரதேச செயலாளர் ஆகியோர் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025