2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் நல்லூர் கிளை, நூலகம் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன் முதற்கட்டமாக நல்லூர் பிரதேச மாணவர்கள் மற்றும் நூலக அங்கத்தவர்களிடையே பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது.

சித்திரம் வரைதல், தமிழ் ஆங்கில வாசிப்புப் போட்டிகள், தமிழ் ஆங்கில கட்டுரைப் போட்டிகள், பொது அறிவுப்போட்டிகள் போன்றவற்றை நடத்தவுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவர்கள், தமது பெயர், பாடசாலை, தரம், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களை மாநகர சபையினூடாக நல்லூர் கிளை நூலகத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X