2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தோட்டமண் ஏற்றிய உழவு இயந்திர சாரதி கைது

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிபத்திரம் இன்றி உழவு இயந்திரத்தில் தோட்டமண் அகழ்ந்து எடுத்து வந்த உழவு இயந்திர சாரதியை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்த அச்சுவேலி பொலிஸார், உழவு இயந்திரத்தினை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, அனுமதிபத்திரம் இன்றி தோட்ட மண் எடுத்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, துன்னாலை கரவெட்டி பகுதியினை சேர்ந்த இயந்திர சாரதி கைது செய்யப்பட்டதுடன் உழவு இயந்திரமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X