2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தேடப்பட்ட மூவர் கைது

George   / 2017 மார்ச் 19 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவரை, யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தெரிவித்தார்.

யாழ். ஐந்து சந்தி மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், இதுவரை சுமார் 80 இலட்சத்துக்கும் அதிகமான நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .