Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 22 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி, மல்லாகம் பகுதிகளில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற வெவ்வேறு திருட்டு சம்பவங்களில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 24 பவுண் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்ட அளவெட்டி பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், திங்கட்கிழமை (21) உத்தரவிட்டதாக தெல்லிப்பழை பொலிஸார், செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர்.
அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு பவுண் நகைகளை எடுத்து சென்றுள்ளனர்.
அதே போல் அளவெட்டி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் யன்னல் கம்பியினை வளைத்து உள் நுழைந்தவர்கள் வீட்டில் உள்ள அணைவரும் நித்திரையில் இருந்த நேரம் பார்த்து 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 10 பவுண் நகையை திருடி சென்றிருந்தனர்.
அத்துடன், மல்லாகம் பகுதியில் உள்ள வீட்டுக்குள் அதே தினம் நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12 பவுண் நகைகளினை திருடியுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர்களால் அளவெட்டி பகுதியினை சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த நபர் திருட்டு சந்தேகத்தில் தெல்லிப்பழை பொலிஸாரினால் திங்கட்கிழமை (21) கைது செய்யப்பட்டார்.
25 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
56 minute ago
1 hours ago