Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 30 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்;, கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் 52 வயதுடைய முனியாண்டி குமாரராசா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மறுநாள் 25ஆம் திகதி, கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் கிணறொன்றில் இருந்து 29 வயதுடைய பொன்னம்பலம் சிவகரன் எனும் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதே தினம் திருகோணமலை, சம்பூர் 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தருசன் எனும் சிறுவன் அப்பகுதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களிடையே பதற்றத்தையும் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளன. இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் இப்பகுதிகளில் மேலும் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
எனவே, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் இனியும் இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago