2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

துணுக்காயில் அறுவடை ஆரம்பம்

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் இவ்வாண்டு 6 ஆயிரத்து 665 ஏக்கர் நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது நடைபெற்று வருகின்றது.

வவுனிக்குளத்தின் கீழ் 2,014 ஏக்கரும் 9 நடுத்தர குளங்களின் கீழ் 3,473 ஏக்கரும் பதினைந்து சிறிய குளங்களின் கீழ் 892 ஏக்கரும் மானாவாரி செய்கை நிலங்களில் 286 ஏக்கரும் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

அதாவது, மல்லாவிக் குளம், தேறாங்கண்டல் குளம், ஐயன்கன் குளம், மருதன்குளம், தென்னியன் குளம், கல்விளான் குளம், கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் குளம், பழையமுறிகண்டி குளம், ஆகிய ஒன்பது நடுத்தரகுளங்களிலும் துணுக்காய் குளம் முருங்கன் குளம், கரம்மைக் குளம், ஆலங்குளம் உயிலங்குளம், வேட்டையடைப்பு குளம், புத்துவெட்டுவான் குளம், மணல்குளம், உள்ளிட்ட பதினைந்து வரையான சிறிய குளங்களின் கீழும் மேற்படி காலபோக செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் செய்கையின் அறுவடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X