2025 ஜூலை 19, சனிக்கிழமை

தொண்டைமானாறு நன்னீர் திட்டத்தால் இறால் தொழிலாளர்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தொண்டைமானாறு பகுதியை நன்னீர் சேகரிப்புப் பகுதியாக மாற்றியமையால் அப்பகுதியில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் புத்தூர் மீனவ சங்கப் பிரதிநிதி தெரிவித்தார்.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த விடயத்தை பிரதிநிதி தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் தொண்டைமானாறு பகுதியில் டிசெம்பர் மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இறால் பெருக்கம் அதிகமாக காணப்படும். இக்காலப் பகுதியில் மீனவர்கள் இறால் பிடியில் ஈடுவார்கள். 

ஆனால், தற்போது, நன்னீர் ஆக்கப்பட்டமையால் இறால் இல்லாமல் போயுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த பிரதிநிதி மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X