2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தொண்டமானறு கடலில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு

Gavitha   / 2016 நவம்பர் 06 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தொண்டமானாறு கடலில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை (05), சூரன் போர பார்ப்பதற்கு, மேற்படி சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள கடலில் சென்று நீராடியுள்ளான். இதன்போது, குறித்த சிறுவன் கடலில் மூழ்குவதைக் கண்ட ஏனைய பக்தர்கள் அவனை மீட்டு வல்வெட்டுத்துறை வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது  தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X