2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

த.தே.கூட்டமைப்பினர் சுய நலனுக்காக மௌனம் காக்கின்றனர்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்பிலும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலும் கூட்டமைப்பு மௌனம் காக்க காரணம் இந்தியாவில் உள்ள தமது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் தான் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள். அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மீனவர்களுக்காக குரல் கொடுக்காது மௌனம் காக்கின்றார்கள்.

'அதேபோன்று சம்பூரில் அமையவுள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலும் கூட்டமைப்பில் உள்ளவர்கள் மௌனம் காக்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களின் நலன் பாதிக்கப்பட்டு விடுமே அல்லது இந்தியா தம்முடன் கோபம் கொள்ளுமோ எனும் பயத்தினால் தான் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காது தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்கள்.

'கூட்டமைப்பில் உள்ளவர்களை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் நலனை விட தமதும், தமது குடும்பத்தினதும் நலனே முக்கியம்' என அவர் குற்றஞ்சாட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X