2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

தாதியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி, யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள், 1 மணி நேரப் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டனர்.

தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 3 அம்ச கோரிக்கையினை முன்வைத்து, இன்று நண்பகல் 12 மணிமுதல் 1 மணி வரை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

“சுகாதார அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்ட மேலதிக கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும், 10 வருடங்களாக உள்ள பதவியுயர்வு காலத்தை  6 வருடங்களாக மாற்ற வேண்டும். தாதிய பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளை வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகளை நிறைவு செய்யத்தவறின் மீண்டும் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தாதியர்கள் தெரிவித்தனர். இதேவேளை, இந்த போராட்டத்தில்  துணை மருத்துவ சேவையினரும் இணைந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X