2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தென்னை மரத்திலிருந்து விழுந்தவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தென்னை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்த சீவல் தொழிலாளி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த வேலன் யோகராஜா வயது(64) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

 கடந்த 9ஆம் திகதி, கள்ளு இறக்குவதற்கு மரத்தில் ஏறியவர் பாளை சறுக்கியதில் மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

உடனடியாக அவர் உறவினர்களினால் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X