2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

துன்னாலை தெற்கு முள்ளி சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடி

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை - கொடிகாமம் வீதியின் துன்னாலை தெற்கு முள்ளிச் சந்தியில் பருத்தித்துறை பொலிஸாரால் பொலிஸ் சோதனைச் சாவடியொன்று இன்று  திங்கட்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீதியால் மணல், மரங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து கடத்தல் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்தன. மேலும், இரண்டு பெண்கள் இந்த வீதியால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இந்த வீதி இருந்தமையால், இந்த வீதியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

மேலும், பொலிஸ் சோதனைச் சாவடி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என அண்மையில் நடைபெற்ற கரவெட்டி பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதற்கிணங்க, காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பரின் வழிகாட்டலின் கீழ், இந்தச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைச் சாவடி 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X