2025 ஜூலை 16, புதன்கிழமை

துப்பாக்கியை மறைத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

ரி - 56 ரக துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்து மோசடி செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை, ஊர்காவற்றுறை பொலிஸார், நேற்று திங்கட்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கேசன்துறை பொலிஸ் வாகன திருத்தகத்தில் பணிபுரிந்து வரும் சார்ஜனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மேற்படி சார்ஜன்ட், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திலுள்ள வாகன திருத்தும் தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது, வைத்திருந்த துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல், தன்னுடன் எடுத்து வந்து கடந்த 9 வருடங்களாக தனது விடுதியில் மறைத்து வைத்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார். 

அத்தியட்சகர் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார், நேற்று (14) காங்கேசன்துறை சென்று குறித்த சார்ஜன்ட் தங்கியிருந்த விடுதியை சோதனையிட்டு, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை மீட்டதுடன், அவரையும் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X