2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் பலி

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு,  ஞாயிற்றுக்கிழமை (18) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாத்தறை மாவட்டம்,  வில்கடுவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) இராணுவ வீரரே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மேற்படி இராணுவ முகாமின் இராணுவத்தினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு இராணுவத்தினர் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X