2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தாயின் கவனயீனத்தால் சிசு பலி

Niroshini   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தாயின் கவனயீன செயற்பாடு காரணமாக, பிறந்து 45 நாட்களான,சிவச்செல்வன் கேசவி என்ற பெண் சிசு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம், சனிக்கிழமை மாலை (08) நாவாலி தெற்கு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைக்கு பால் கொடுத்த தாய், ஏணையில் போட்டு விட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார்.

ஏணையில் போடப்பட்டிருந்த துணி, காற்று காரணமாக பிள்ளையின் முகத்தின் மீது தவறுதலாக வீழ்ந்துள்ளது. வேலைகளை முடித்துவிட்டு வந்த தாய், குழந்தையை தூக்கிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிசுவை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X