2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தாய்ப்பால் புரையேறி சிசு பரிதாபமாகப் பலி

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பிறந்து 35 நாட்களேயான ஆண் சிசுவொன்று, நேற்று புதன்கிழமை (06) தாய்ப்பால் புரையேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கல்விளான் சுழிபுரம் பகுதியினைச் சேர்ந்த கிருபாகரன் லேசாக் என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை, சிசு அழுத போது அரவணைத்துப் பால் கொடுத்த தாய் நித்திரைத் தூக்கத்தில் அயர்ந்து போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிசுவுக்கு பால் புரையேறி சிசு உயிரிழந்துள்ளது. பின்னர் தாய் எழுந்து சிசுவைத் தூக்கிய போது சிசு அசைவற்று இருந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக யாழ். போதனா வைத்திசாலைக்கு எடுத்துச் சென்ற போது சிசு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X