2025 ஜூலை 05, சனிக்கிழமை

தாய்வீட்டுக்கு தனியாகச் சென்ற சிறுமி, மூதூரில் மீட்பு

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், பாலாவி வடக்கு வாகையடி பகுதியைச் சேர்ந்த சிறுமியான குணரத்தினம் சஞ்ஜீவினி (வயது 15) ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் காணாமல் போன நிலையில், திருகோணமலை மூதூர் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தில் அநாதரவான நிலையில் திங்கட்கிழமை (02)  மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி திருகோணமலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்திக்க என்.பண்டார தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள தயாரின் வீட்டுக்குச் செல்லும் நோக்கில் இவர், திருகோணமலைக்குச் செல்லும் பஸ்ஸில்; ஏறிச்சென்றுள்ளார்.

இந்நிலையில், மூதூர் பகுதியில் அநாதரவான நிலையில் சிறுமி ஒருவர் இருப்பதைக் கண்ட பொதுமக்கள், பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரால் மீட்கப்பட்ட குறித்த சிறுமியை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .