Gavitha / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 12ஆம் திகதி நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.
வீட்டிலிருந்தவர்கள் ஆலயத்துக்குச் சென்ற சமயம், வீட்டுக்குள் நுழைந்து 3 பவுண் நகை மற்றும் கமரா என்பன திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்த தெல்லிப்பழை பொலிஸார், 46 வயதுடைய கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும், மற்றும் குருமன்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரையும் கைது செய்திருந்தனர்.
56 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
7 hours ago