2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திருட்டுடன் தொடர்புடைய நால்வருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

இவ்வருடம் இடம்பெற்ற ஏழு பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னாபுரம் நாவந்துறை, யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதிகளை சேர்ந்த 21-25 வயதுக்கு உட்பட்ட நபர்களே பொலிஸாரால் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது 21 பவுண் நகைகள், 1 மடிக்கணணி, 2 அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் சில நகைகள் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X