2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற மூவர் கைது

Niroshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், திருட்டு மின்சாரம் பெற்று வந்த மூவர் செவ்வாய்க்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகளும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து, திக்கம் மற்றும் அல்வாய் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, மேற்படி மூன்று வீட்டு உரிமையாளர்களும் பிரதான வடத்திலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த மூவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கை எடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X