2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருடர்களால் மக்கள் பாதிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி நகரில் கோழிகள், சூரிய மின்கலங்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள் என்பன திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

திங்கட்கிழமை (11) அதிகாலை 2.00 மணிக்கு ஆனந்தநகர் வீடொன்றில் புகுந்த திருடர்கள் 10 கோழிகளை திருடிச்சென்றுள்ளனர். இதே வீட்டில் ஒருமாதத்துக்கு முன்னர் கோழிக்கூட்டுடன் 25 கோழிகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர் 17 சேவல்களும் திருடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கோழிகள், சூரியமின்கலங்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள் என்பன திருடப்படுவது தொடர்பான முறைப்பாடுகளே அண்மைக்காலமாக கூடுதலாக பதிவுசெய்யப்படுவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வீடுகளில் வாழ்வாதார உதவிகளாக கோழிக்கூடுகள், கோழிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் திருடர்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X