2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தீர்வின்றித் தொடரும் கேப்பாபுலவு போராட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 21 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கேப்பாபுலவு மக்களின் தொடர் நிலமீட்புப் போராட்டம், இன்று (21), 21ஆவது நாளாக, தீர்வின்றித் தொடர்ந்தது.

கடந்த முதலாம் திகதி, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றிபெற்று நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கேப்பாபுலவு மக்கள், தமது சொந்த காணிகளில் கால் பதிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன், கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் இடம்பெற்று வருகின்றது.

கேப்பாபுலவு இராணுவ படைக் கட்டளைத் தலைமையகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்து, தொடர் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தாம் 21 நாட்களாக வீதியிலிருந்து போராடுவதாகவும் எமது அரச அதிபரோ பிரதேச செயலாளரோ, இதுவரை தம்மை சந்தித்துக் கலந்துரையாடவில்லை என, மக்கள் கவலை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .