2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தீருவில் பகுதியில் சர்வதேச தரத்தில் நீச்சல் தடாகம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

25 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், வல்வெட்டித்துறை - தீருவில் பகுதியில் தேசிய தரத்திலான நீச்சல் போட்டிகளை நடத்துவதற்குரிய நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தனின் பெயரில் இந்த நீச்சல் தடாகத்தை அமைக்க பிரதேச மக்கள் விருப்பம் தெரிவித்து, வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் வடமாகாண சபை ஊடாக, முன்மொழிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனை ஏற்றுக்கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சு, தீருவில் பகுதியில் நீச்சல் தடாகத்தினை அமைக்க உத்தேசித்துள்ளது.

வெகுவிரைவில் வரைபடம், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X