2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தெற்கு ஊடகவியலாளர்கள் யாழை அடைந்தனர்

Kogilavani   / 2016 மார்ச் 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' எனும் தொனிப் பொருளில் வெகுஜன ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலக தலைமையில் தெற்கு ஊடகவியலாளர்கள, நேற்று சனிக்கிழமை (26) பகல் யாழ்ப்பாணத்தை அடைந்தனர்.

யாழ்.தேவி புகையிரத்ததில் புறப்பட்ட ஊடகவியலாளர்கள் குழு மாலை யாழ் புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர். அக்குழுவினரை யாழ். புகையிரத நிலையத்தில் வைத்து யாழ்.ஊடக அமையத்தினர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் குழு வரவேற்றனர்.

2 நாள் விஜயம் மேற்கொண்டு  யாழ்ப்பணத்துக்கு வருகை தந்துள்ள இக் குழுவினர், யாழில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும்; கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதிமைச்சர் கருணாரத்ன பரணவிதான, ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என 200 பேர் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஊடக அமைச்சருக்கு, ஊடக அமையத்தினரால் ஐந்தடி உயர எழுதுகோல்  கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X