2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தொலைக்காட்சித் திருடர்கள் நால்வர் சிக்கினர்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் ரயில் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சியைத் திருடிய 4 சந்தேகநபர்களை, நேற்று  செவ்வாய்க்கிழமை (27) கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டில் கடந்த 23ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. 

இது தொடர்பில் குறித்த வீட்டைக் கண்காணிக்கும் பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .