2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தேவாலய காணியை சுவீகரிக்க ஏற்பாடு

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பான அறிவித்தல் கடிதம் , யாழ்.மாவட்டச் செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், கடற்படையின் சில்லாலை கட்டளைத் தளபதி, ஜே - 222 கிராம அலுவலர், யாழ்.ஆயர் இல்லம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X