Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 24 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரின் குற்றச்செயலை மறைக்க முனைந்த குற்றச்சாட்டில் அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் பிறிதொரு ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆசிரியர், நேற்றுக் காலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
எனினும், அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவதற்கான உத்தரவு கிடைக்கப்பெற்றதையடுத்து, அவர்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்ப்படுத்தினர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது, பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் விடயத்தை மூடிமறைப்பதாகக் கூறிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை முன்றலில் கடந்த புதன்கிழமை (22) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் நிலவிய பதற்றத்தை தணிக்க, அப்பகுதியில் அதிகளவான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கோட்ட மற்றும் வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் குற்றத்தை மறைப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் கைதுசெய்யப்படவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இதனடிப்படையில் ஆசிரியர், புதன்கிழமை (22) மாலை கைதுசெய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது, 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .