Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இளவாலை, வடலியடைப்பு பகுதியில், சைக்கிளில் சென்ற இரு பெண்களை தாக்கி 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 பவுண் தாலி கொடியை அபகரித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் சீசீரீ கமராவில் பதிவாகியுள்ள NP-டீஊமு-1879 இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் தருவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும் என இளவாலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள்,அவ்வழியே வந்த இரு பெண்களை தாக்கி தாலி கொடியை அறுத்தெடுத்து சென்றுள்ளனர். இச்சம்பவம், கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் உள்ள வீடு ஒன்றின் முன் பொருத்தியிருந்த சீசீரீ கமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் நகையை பறிகொடுத்த பெண்கள், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்படி இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் பதிவு செய்திருக்கவில்லை எனவும் போலி இலக்கத்தகடுகளை பொறுத்தி , கொள்ளைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மேற்படி இலக்கத்தினை கொண்ட மோட்டார் சைக்கிளை காண்பவர்கள், இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021- 221 1922, அல்லது பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 077-7553150 எனும் இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும்.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025