Niroshini / 2021 ஜூன் 01 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதை காணக்கூடியதாக இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலாளர்; க. மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே, அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கல் செயற்பாட்டை மிக வேகமாக முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில், மக்கள் தடுப்பூசியைப் பெறுவதில் ஆர்வம் காட்டாத நிலையில், தற்போது, ஆர்வத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவதாகத் தெரிவித்த அவர், இதுவரை 9 ஆயிரம் பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனரெனவும் கூறினார்.
மேலும், 'அடுத்தகட்ட தடுப்பூசியும் எமக்கு கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இந்த நிலையில் ஏற்கெனவே கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் தடுப்பூசி வழங்கலை மிகவும் துரிதமாக முடிப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றோம்
'அத்துடன், தற்போது பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற செல்வதற்கு எந்தத் தடையுமில்லை' என்றும், மாவட்டச் செயலாளர் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago