2025 மே 19, திங்கட்கிழமை

தடை செய்யப்பட்ட மருந்து விசிறி வாழைப்பழங்கள் விற்பனை

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யப்பட்ட மருந்தை விசிறி வாழைப்பழங்களை விற்பனை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாவகச்சேரி பொதுச்சந்தையில் வாழைக்குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்து விசிறப்பட்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச சுகாதார பரிசோதகருக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் அங்கு சென்ற போது, குறித்த வியாபாரி தடை செய்யப்பட்ட மருந்தை வாழைக்குலைக்கு விசிறிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது சுகாதார பரிசோதகர்  வியாபாரியைக் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.

அதனை அடுத்து குறித்த வியாபாரிக்கு எதிராக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X