Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 17 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு தடையை ஏற்படுத்த முயன்றவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக அறிந்து கொள்ளவுள்ளதாக யாழ்.பல்கலைகழக சட்டத்துறை தலைவரும் விரிவுரையாளருமான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்ற கலந்துரையாடல் தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனை அடுத்து யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் குறித்த கருத்தரங்கு “அரசியல் கலப்பற்றதாக நடத்தப்படுவதனை உறுதிப்படுத்துவது தங்களின் கடமையாகும்." என கடிதம் மூலம் யாழ். மாவட்ட கூட்டுறவு சபை செயலாளரிடம் கோரி இருந்தார். செயலாளர் உறுதிப்படுத்திய பின்னரே கலந்துரையாடல் நடைபெற்றது.
அதற்கு முன்னர் குறித்த கலந்துரையாடல் யாழ்.பல்கலைகழகத்தில் நடைபெறவிருந்தது. அதற்கு தடை விதிகப்பட்டதன் பின்னரே நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
அது தொடர்பில் கு.குருபரன் கருத்து தெரிவிக்கையில்,
விசித்திரமான கடிதங்கள் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து எமக்கு கிடைக்க பெற்று உள்ளன. அது எம்மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனை ஏன் தடுக்க முயல்கின்றார்கள். இது தமிழர் அரசியல் போக்கில் சரியான பாதையல்ல.
இந்த முறைப்பாட்டை செய்து இதனை தடுக்க முயன்றவர் யார் என்பதனை ஊகிக்க நான் முயலவில்லை. ஊகங்களை விட அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறியவுள்ளேன் என தெரிவித்தார்.
13 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago