2025 மே 17, சனிக்கிழமை

தண்டவாளத்தில் படுத்திருந்தவருக்கு பிணை

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நிறை போதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர், கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான் முன்னிலையில், நேற்று (28) முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உரும்பிராயை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த நபரின் மனைவி, வன்னி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகள் சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி, பிள்ளைகளை தன்னால் பார்க்க முடியாத விரக்தியில் வாழ்ந்து வந்ததனால், தனது உயிரை மாய்க்கவே, கொடிகாமம் பகுதிக்கு வந்து மது அருந்தி விட்டு தண்டவாளத்தில் படுத்திருந்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த நபரை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது, நீதவான், குறித்த நபரை சொந்த பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அடுத்த மாதம் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .