2025 மே 22, வியாழக்கிழமை

தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலி

Editorial   / 2018 மே 11 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு 5 வயது மகள் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுகந்தன் துசாந்தினி என்ற சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தந்தை, தனது தொழிலுக்குச் செல்கின்ற போது, தனது மகளையும் முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கி விடுவதை வழக்கமாக  கொண்டிருந்தார்.

அவ்வாறே கடந்த புதன்கிழமையும் (09) காலை வீட்டிலிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை, முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டு வாகனத்தை  திருப்பிய போது, வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்குள் நுழைவதுக்கு   எத்தனித்த போது தந்தையின் வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.

உடனடியாக தந்தை, மகளை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (10) குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி பெற்றோருக்கு ஒரேயொரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X