Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'எங்களுடன் கலந்தாலோசிக்காது, வட பகுதிக்கு என்ன வேண்டும் என்பதை, மத்திய அரசாங்கம் தாமாகவே முடிவெடுக்கின்றது. பின்னர், அதனை ஆதரித்து ஒத்துழைக்குமாறு, எமக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்பதை, இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரெபேட் கில்டன் குழுவிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்' என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமரிக்க துணைத்தூதுவர் உள்ளடங்கிய குழுவினர், வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில், புதன்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,
'வருகை தந்த குழுவினர், தற்போது நியமிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் வடமாகாணத்தின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசாங்கம், எம்முடன் கலந்தாலோசிக்காது முடிவுகளை எடுக்கிறது. அவர்களாக ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை நடைமுறைப்படுத்த எம்மிடம் ஒத்துழைப்புக் கேட்கிறார்கள். இதுவே நிர்வாகம் சார்ந்த பிரச்சினையாகக் காணப்படுகின்றது என்பதை, அமெரிக்கத் துணைத்தூதுவரிடம் தெரியப்படுத்தினேன்.
அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடினர். குறிப்பாக அதிகாரப் பரவலாக்கம் என்பது, குறித்த ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் தம்மை தாம் நிர்வகிக்கின்ற சுயநிர்ணயம் வழங்கப்படவேண்டும். இதனை தான் இந்தோனேஷியாவில் அவதானித்ததாகவும் அங்கு தற்போது போர் நிறைவடைந்து தீர்வும் கிடைத்துவிட்டதாகவும் துணைத்தூதுவர் என்னிடம் தெரிவித்தார்.
சரித்திர ரீதியாக, 1930ஆம் ஆண்டு, நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த போது, நிர்வாக இலகுவாக்கத்துக்காக மாகாணங்கள் இணைக்கப்பட்டன. பின்பு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், இலங்கை ஒரு நாடாக இருந்தது.
1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு யாப்பில், பெரும்பான்மைக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. இதனால் தான் இத்தனை கொந்தளிப்புகள், பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. ஆகவே எமது எதிர்பார்ப்புகள், வேதனைகள் என்ன என்பதை, மத்திய அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை நான் துணைத்தூதுவரிடம் தெரிவித்தேன்.
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கபட்ட கடிதம் தொடர்பில், தாமும் தெரிந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டனர். அதற்கு, அக்கடிதத்தின் பிரதியை அவர்களிடம் கையளித்துள்ளேன்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago