Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடுவில் லைவ் லேன் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 67 வயதான வயோதிப பெண் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீதேவி பாலசிங்கம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (01) மாலை வரை வீட்டில் இருந்த பெண்ணின் நடமாட்டத்தை திங்கட்கிழமை (02) காணாததை அடுத்து, அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளே சென்று பார்த்த போது, அவரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், வீட்டு யன்னல் கம்பிகளை வளைத்து உள் நுழைந்துள்ள திருடர்கள் இவரின் இரு கைகளை கட்டி, வாயில் துணியினை திணித்து, வீட்டுப் பொருட்களை கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் இரு மகன்கள் கொழும்பில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இக்கொலை, ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இடம்பெற்றிருக்காலம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதவான், விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை சட்ட வைத்திய அதிகாரி ஊடாக உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுன்னாகம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago