2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தனியார் காணியில் மிதிவெடி மீட்பு

George   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குப்பிளான் வடக்கு பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடிக்க கூடிய நிலையில் காணப்பட்ட மிதிவெடி, புதன்கிழமை (21) மீட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

காணி உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது உறவினர் ஒருவர் அந்தக் காணியினை பராமரித்து வருகின்றார்.

அவர் காணியினை துப்பரவு செய்த போது நிலத்தில் புதையுண்ட நிலையில் மிதிவெடி இருப்பதை கண்டுள்ளார்.  அதனையடுத்து, இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு, விசேட அதிரடிப்படையினருடன் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டு செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X