2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கொழும்புத்துறைக்கும் யாழ். நகரத்துக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 5 தனியார் பஸ்களின் சாரதிகளும் நடத்துனர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (19) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கொழும்புத்துறையிலிருந்து யாழ்.நகரம் நோக்கி காலை 9 மணிக்குச் சென்ற பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலைக் கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வழியூடாக தனியார் பஸ் சேவைகள் மாத்திரம் இடம்பெறுதால், அப்பகுதியூடான போக்குவரத்து முடங்கியுள்ளது.

யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனுடன் கலந்துரையாடி தங்களின் பாதுகாப்பு உறுப்பதிப்படுத்தப்பட்ட பின்னரே, சேவையை மீண்டும் ஆரம்பிப்போம் என பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X