Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தனியார் பஸ், முச்சக்கரவண்டி விபத்தினால் 10 வயது பாடசாலை சிறுவன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவனின் தாயார் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று புதன்கிழமை (03) மதியம் பலாலி வீதி திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றது.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் இரண்டும் போட்டி போட்டு வேகமாக பயணித்துள்ளன.
குறித்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, தனியார் பஸ் முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு முந்திச் செல்ல முற்பட்ட தனியார் பஸ், தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கரவண்டியினை மோதியது.
அங்கு கூடிய மக்கள் தனியார் பஸ் சாரதியினை சரமாரியாக தாக்கியுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் சாரதியைக் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
39 minute ago
4 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
17 Jul 2025
17 Jul 2025