2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தமிழை கற்கின்ற ஆர்வம் குறைந்து வருகின்றது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

மாணவர்களிடையே தமிழைக் கற்கின்ற ஆர்வம் குறைந்து வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

எம்மிடையே ஆங்கிலம் முழுமையாகத் தெரிந்தவர்களும் இல்லை. சிங்களம் முழுமையாக தெரிந்தவர்களும் இல்லை. ஏன் தாய்மொழி தமிழையே முழுமையாகக் கற்க வேண்டும். அதனை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எத்தனை பேரிடம் உள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே தமிழ் மொழியினைக் கற்கின்ற மாணவர்களின் வீழ்ச்சியினை வைத்து இதனைக் கூறலாம். மாணவர்களிடையே தமிழ் மொழி கற்கின்ற ஆர்வம் குறைந்து வருகின்றது.

1960ஆம் ஆண்டில் தமிழைப் பாடமாகக் கொண்ட செங்கை ஆழியான், யோகநாதன், கதிர்காமநாதர் போன்ற படைப்பாளர்கள் உருவானார்கள். பல போட்டிகள் இருந்தன. பழந்தமிழ் இலக்கியமா, நவீன இலக்கியமா என்ற போட்டிகள் இருந்தன.

ஆனால், இப்போது அவ்வாறான போட்டிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழ்மொழியினைக் கற்கின்ற அதனை வளர்க்கின்ற ஆர்வம் குறைந்து வருகின்றது. இலக்கியப் படைப்புகள், காவியங்கள் ஒருபோதும் முடிவுக்கு வந்து விட்டதாக கருதக் கூடாது.

இனிவரும் காலங்களிலும் பெரும் இலக்கியங்கள், காவியங்கள் வெளிவரும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X