Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 மே 12 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழினப் படுகொலை வாரம், இன்று வெள்ளிக்கிழமை (12) முதல் அனுஷ்டிக்கபடவுள்ள நிலையில், யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களாக பா.கஜதீபன், அனந்தி சசிதரன், விந்தன் கனகரட்ணம், அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், நாளைய தினத்தன்று, கிழக்கு மாகாணத்தில் இவ்வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், 14ஆம் திகதி நவாலி சென். பீற்றர்ஸ் ஆலயத்திலும் இந்நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், 15ஆம் திகதியன்று நெடுந்தீவுப் பகுதியிலும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் 18ஆம் திகதியன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவு ஏந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இறுதி நாள் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago